கிராம்பு மருத்துவ குணங்கள் இதோ உங்களுக்காக !!!!   Leave a comment

Image

கிராம்பில் கார்போ ஹைட்ரேட், ஈரப்பதம், புரதம், வாலடைல் எண்ணெய், கொழுப்பு, நார்ப்பொருள், மினரல், ஹைட்ரோகுளோரிக் அமிலச் சாம்பல்கள், கால்சியம், பாஸ்பரஸ், தயமின், ரிபோ பிளேவின், நயாசின், வைட்டமின் சி மற்றும் ஏ போன்றவை உள்ளன. கிராம்பின் மொட்டு, இலை,தண்டு போன்றவற்றிலிருந்து எண்ணெய் எடுக்கப்படுகிறது.

 

* கிராம்பில் பலவித மருத்துவ குணங்கள் உள்ளன. இவை பெரும்பாலும் ஊக்கு வித்தல், தூண்டுதல் உண்டாக்கும் பொருளாக உள்ளது. பல வலிகளைப் போக்கு வதுடன் வயிற்றுப் பொருமல், குதவழிக் காற்றேhட்டம் போன்றவற்றுக்கும் மிகச் சிறந்த நிவாரணி.

 

* உடலைப் பருமடையச் செய்யவும், வளர்ச்சிதை மாற்றப்பணிகளுக்கு உதவவும், சுட்டை சமப்படுத்தவும், ரத்த ஓட்டத்தை முறைப்படுத்தவும் இது பலன் அளிக்கிறது.

 

* ஜீரண உறுப்புகளில் சுரக்கும் நொதிகளை கிராம்பு ஊக்குவிக்கிறது. இதனால் ஜீரணக்கோளாறுகள் நீங்குகின்றன.

 

* கிராம்புப் பொடியை வறுத்து அரை கிராம் தேனில் குழைத்து சாப்பிட்டால் வாந்தி நிற்கும். கிராம்பில் உள்ள விறைக்கப் பண்ணும் ஒரு பொருள் வயிற்றிலுள்ள சில உறுப்புகளை விரைப்படையச் செய்து வாந்தியைத் தடுக்கிறது.

 

* நான்கு கிராம் கிராம்பை மூன்று லிட்டர் தண்ணீரில் போட்டு அரை பங்காக சுண்டும் அளவிற்கு கொதிக்க வைத்துப் பருகினால் காலரா குணமடையும்.

 

* சிறிது சமையல் உப்புடன் கிராம்பை சப்பிச் சாப்பிட்டால் தொண்டை எரிச்சல், கரகரப்பு நீங்கி தொண்டை சரியாகும். தொண்டை அடைப்பால் ஏற்படும் எரிச்சலைத் தவிர்க்க, சுட்ட கிராம்பு மிகச் சிறந்தது.

 

* கிராம்பு எண்ணெய் மூன்று துளியுடன் தேன் மற்றும் வெள்ளைப் பூண்டுச் சாறு சேர்த்து படுக்கைக்குப் போகும் முன்பு சாப்பிட ஆஸ்துமாவால் ஏற்படும் சுவாசக் குழல் அழற்சி சரியாகும்.

 

* முப்பது மில்லி நீரில் ஆறு கிராம்புகளைப் போட்டு கொதிக்க வைத்து அந்தக் கசாயத்தில் தேன் கலந்து குடித்தால் ஆஸ்துமா கட்டுப்படும்.

 

* கிராம்புப் பொடியை பற்பொடியுடன் கலந்து பயன்படுத்தி வர, வாய் நாற்றம், ஈறு வீக்கம், பல்வலி ஆகியவை குணமாகும். கிராம்பு எண்ணெயை பாதிக்கப்பட்ட ஈறுகளில் தடவிவர குணம் கிடைக்கும்.

 

* 3-5 துளி நல்லெண்ணெயில் ஒரு கிராம்பை சூடு காட்டி அந்த எண்ணெயை வலியுள்ள காதில் இட்டால் சுகம் கிடைக்கும்.

 

* தசைப்பிடிப்புள்ள இடத்தில் கிராம்பு எண் ணெயைத் தடவி வர குணம் கிடைக்கும்.

 

* கிராம்பு மற்றும் உப்பை பசும்பாலில் அரைத்து அந்தப் பசையைத் தடவினால் தலைவலி பறந்துவிடும். தலையிலுள்ள நீரை உப்பு உறிஞ்சி எடுப்பதால் தலைபாரம் குறைந்து குணம் கிடைக்கிறது.

 

* கண் இமைகளில் ஏற்படக்கூடிய அழற்சிகளை போக்க கிராம்பை நீரில் உரசி அந்த நீரைப் பயன்படுத்தினால் குணம் கிடைக்கும்.

 

* சமையலுக்கும், கறிகளுக்குச் சுவையூட்டவும், கறி மசாலா வகைகள் தயாரிக்கவும் கிராம்பு முக்கியம். வாசனைத் தயாரிப்பு, சோப்புத் தயாரிப்பிலும் இது பயன்படுகிறது.

Posted மார்ச் 2, 2013 by vimalam in Uncategorized

கண்ணோடு கண்ணாக !   Leave a comment

கண்ணோடு கண்ணாக !

கண்ணோடு கண் நோக்கி ,
காதல் பார்வை பார்த்து ,
உன்னுள் உள்ள அன்பை ,
என்னுள் எடுத்து கொண்டேன் .
ஆனாலும் ,
அது எப்படி அம்மா ,
உன் அன்பும் பாசமும் ,
ஜீவ நதியாய் ,
சுரந்து கொண்டு இருக்கிறது .

Posted பிப்ரவரி 28, 2013 by vimalam in Uncategorized

வறுமை   Leave a comment

வறுமை

பசி வயிற்றை கிள்ளும் -
பழைய சோற்று பருக்கை கூட
பட்டினி தீயை அணைக்க இருக்காது .
குளிரும் வெயிலும் உடலை வாட்டும் -
குடியிருக்க குடிசை இருக்காது.
மானத்தை மறைக்க
மாற்று துணி இருக்காது.
உழைக்க உடம்பு இருந்தும்
ஊழியம் செய்ய வாய்ப்பு இருக்காது.
பசித்த குழந்தைக்கு
பால் இருக்காது.
நம்மை சுற்றி மனிதர் கூட்டம்
ஆனால்
மனித நேயம் கிடைக்காது .
வறுமையிலும் கொடிய வறுமை
மனிதநேயம் இல்லா மனிதர்கள்
மத்தியில் வாழ்வதே .

Posted ஜனவரி 22, 2013 by vimalam in Uncategorized

கோலம்   Leave a comment

        கோலம்

பெண்ணே ,
நன்றாக பழகி கொள்,
கோடுகளை ,
நேராகவும் ,
வளைத்தும் ,
வட்டமாகவும் ,
சதுரமாகவும்
புள்ளியை
சேர்க்கவும் ,
கோர்க்கவும் ,
வண்ணங்களை
கலக்கவும்
விலக்கவும்,
நன்றாக கற்று கொள்.
பெண்ணே
உன் பார்வையின்
கூர்மையும்
விரல்களின்
வீச்சும்
எண்ணங்களின்
வண்ணங்களும்
உன்
வாழ்க்கை
கோலத்தையும்
வர்ணமயமாக்கட்டும் .

Posted ஜனவரி 18, 2013 by vimalam in Uncategorized

பலூன் வியாபாரி   Leave a comment

     பலூன் வியாபாரி

வயிறு சுருங்க ஊதி
வாய் வலிக்க பலூனில்
காற்றை நிரப்புகிறேன் .
என் வயிறு நிரம்புவதற்காக .

Posted ஜனவரி 17, 2013 by vimalam in Uncategorized

தனிமை   Leave a comment

தனிமை

தனிமை மிக இனிமை
அனுபவிக்க தெரிந்தவனுக்கு .
தனிமை ஒரு வரம்
கிடைக்கபெற்றவனுக்கு .
தனிமை பெரும் பேறு
தன்னை தேடுபவனுக்கு .
தனிமை மிக அருமை
அமைதி காப்பதற்கு .

Posted ஜனவரி 17, 2013 by vimalam in Uncategorized

Follow

Get every new post delivered to your Inbox.

Join 2,295 other followers