Leave a comment

image

Posted நவம்பர் 2, 2015 by vimalam in Uncategorized

உன்னை கரம் பிடித்தே…..   Leave a comment

20140606-122312-44592845.jpg

Posted ஜூன் 6, 2014 by vimalam in Uncategorized

டுவிட் தொகுப்புகள் …..   Leave a comment

@saattooran: @ThanjaiSabari
மாசற்ற காற்று
நெஞ்சில் மோதி
துள்ளும் போது
மகிழ்ச்சியில்
துள்ளும் மனது.
#அனுபவம்

My tweet dated 06/06/2014.

@periyakulam: @minimeens
கறந்த பாலை
அக்கறையாய் காய்ச்சி
மணக்கும் காபி
டிகாக்‌ஷனை கலந்து
அன்பினை கூட்டி
கொடுத்தாளே காபி
புன்னகை சிந்த என்
காதல் மனைவி !

My tweet dated 06/06/2014

@saattooran: பல ஆயிரம் மைல்கள் தொலைவில்
உள்ள பேரனை நினைத்து
மனம் வாடுகிறது.மனது நெகிழ்கிறது.
கட்டி அணைத்துக்கொள்ள மனம் ஏங்குகிறது.
-தாத்தாவின் ஏக்கம்

My tweet dated 05/06/2014

@saattooran: விமர்சனம் செய்வது நல்லது.
அதுவும் கருத்துள்ள விமர்சனங்களாக.
ஆனால் விமர்சனம் என்ற பெயரில்
தனிமனிதரை வசை பாடுவது
அநாகரீகத்தின் உச்சம்.

My tweet dated 04/06/2014

Posted ஜூன் 6, 2014 by vimalam in Uncategorized

ரசத்து வண்டல்.   Leave a comment

முன்குறிப்பு:
உப்பு சப்பில்லாத விஷயத்தை ரசமாக எழுத முடியுமா என்ற
என் முயற்சியின் விளைவே இந்த ரசத்து வண்டல் விஷயம் .

ரசத்து வண்டல் :

ரசத்து வண்டல் என்றவுடன் எனக்கு ஞாபகம் வருவது மன்னி தான்.
மன்னி என்பது என்னுடைய பாட்டி. அம்ம்மாவுடைய அம்மா.
குடும்பத்தின் புதிய தலைமுறைகளுக்கு ரசத்து வண்டல் பற்றி
அவ்வளவாக அறிய வாய்ப்பு இல்லை. எனென்றால்
இது பிஸ்சா பர்கெர் காலம்.

வீட்டில் எல்லோரும் சாப்பிட்டவுடன் கடைசியில் சாப்பிடுவது
(அந்த காலத்தில்) அம்மா,பாட்டி போன்றவர்கள் தான்.
மற்றவர்கள், சாப்பிடும்போது நமக்காக சமையல் செய்தார்களே
அவர்களுக்கு சாப்பிட எதாவது கொஞ்சமாவது மீதம் வைக்கவேண்டும்
என்று நினைக்காமல் வெளுத்து கட்டுவார்கள்.
அவர்களை சொல்லியும் குற்றமில்லை.
ஏனன்றால் அம்மா,பாட்டி சமையல் அவ்வளவு நன்றாக இருக்கும்.

ஆகையால் எல்லோரும் சாப்பிட்டவுடன் அம்மா , பாட்டி தனிமையில்
உட்கார்ந்து சாப்பிடும்போது (குறிப்பாக வீட்டில் உள்ள ஆண்கள்)யாருமே
பக்கத்தில் வந்து அவர்களை கவனிக்க மாட்டர்கள்.அவர்களும் அதை
எதிர்பார்க்கமாட்டார்கள். கூட்டு, பொரியல் அவ்வளவாக இல்லயென்றால்
அதை பற்றியும் கவலைப்படாமல் சுட்ட அப்பளம் தயார் செய்துகொண்டு
சாப்பிட உட்காருவார்கள்.

இலையில் சாதம் + ரசத்துவண்டல் ,மேல் நன்றாக,
நிறைய நெய் விட்டு பிசைய ஆரம்பித்தவுடன் எங்கிருந்தோ இரண்டு பேர் வந்து எனக்கு ஒரு உருண்டை கொடேன் என்றுகேட்டு, நாலு உருண்டையாக
சாப்பிட்டு விட்டு ரொம்ப டேஸ்டாக இருக்கு என்று சொல்லிவிட்டு போய்விடுவார்கள்..அப்பொழுது கூட பாவம் இவர்களுக்கு
சாப்பிட ஒன்றும் இல்லையே என்று நினக்கமாட்டர்கள்.

இந்தமாதிரி சில காரணங்களால் எனக்கு ரசத்துவண்டல் சாப்பிடப்பிடிக்காது.
ஆனால், அம்மாவிடம் கேட்டால் அதெல்லாம் ஒன்னும் கிடையாதுஎன்பாள்.

ரசத்துவண்டல் நல்ல மஞ்சள் நிறத்தில், கொஞ்சம் சிகப்பாக,
நிறைய பருப்புடன். கொத்தமல்லி கருகப்பிலையுடன்
பார்க்கவே பிராமதமாக, நல்ல வாசனையோட இருக்கும்.
சாதத்துடன் நெய் ஊற்றி பிசையும் போது கமகமவென இருக்கும்.
அதில் உள்ள கொத்தமல்லி, கருகப்பிலை, புளி சக்கை,
கொத்தாக எடுத்து, உள்ளங்கையில் வைத்து, ஒரு
புழி,பிழிந்து சாரை, சாதத்துடன் கலந்து கொண்டு
அப்பளம், ஊறுகாய் அல்லது மாவடுகூட சாப்பிடும்போது,
அலாதி ருசியாக இருக்கும்.

சாயங்கால டிபனுக்கு அடை, தோசை,உப்புமா,இட்லி எதுவாக
இருந்தாலும் ரசத்து வண்டலுடன் சேர்த்து சாப்பிட்டால்
அது தனி டேஸ்டாக இருக்கும்.

அம்மாகிட்ட ரசத்து வண்டல் பற்றி கேட்டேன். அம்மா உடனே, அந்தகால
ரசத்துவண்டல் பிரமதாமாக இருக்கும். காரணம் நிறைய பருப்பு போடுவார்கள்.
ரச பாத்திரத்தில், பாதிக்குமேல, பருப்பு இருக்கணும். அப்பத்தான் ரசத்து
வண்டல், நன்றாக அமையும் என்றாள்.

கணேசனுக்கு (இவர் அம்மாவின் சகோதரர்)ரசத்து வண்டல் ரொம்பவே
பிடிக்கும். எங்க எல்லோருக்கும் தான், என்று கூறிவிட்டு ,
நம்ம வீட்டிலே ராகவனுக்கும் ஜெயராமனுக்கும் (இவர்கள் என் சகோதரர்கள்)
இதுல போட்டி என்றாள். அம்மா , ரமணனை (பேரன்) ஸ்கூல்
போய், விட்டு விட்டு, வந்தவுடன் , கொஞ்சம் ,ரசத்து வண்டல் சாதம்
சாப்பிடுவேன் என்றாள் .ரஞ்சனிக்கும் (சகோதரி) பிடித்த விஷயம் இந்த
ரசத்து வண்டல். சமையலுக்கு நடுவுல கொஞ்சம் ரசத்து வண்டல்
சாதத்தை கிண்ணத்தில் பிசைஞ்சு சாப்பிட அவளுக்கு பிடிக்கும் .
என்று அம்மா சொன்னாள்.

மோர் சாதத்திற்கு கூட, ரசத்துவண்டல் பிரமாதமான காம்பினஷன்.
சிலபேர் சுவரஸ்யமா அதை கைல ஒரு வாய் எடுத்து ஊறுஞ்சி
சாப்பிடுவதை பார்க்க எனக்கு பிடிக்கும் ..

எல்லாருக்கும் அவ்வளவாக ரசிக்காத , தெளிவு ரசம் எனக்கு மிகவும்
பிடிக்கும் .. அதுவும் எலுமிச்சை ரசம் எனக்கு மிகவும் பிடித்தது. அந்த
எலுமிச்சை வாசனையுடன, சாதத்துடன் அந்த லைட் மஞ்சள் கலர்
தெளிவு ரசம் விட்டு பிசைந்து ,மேல பொரித்த உளுந்து அப்பளம் போட்டு,
அது ஊறியவுடன் ,சாப்பிட்டால் ,அந்த மாதிரி டேஸ்ட் அபாரம்.

தெளிவு ரசம் எக்ஸ்பெர்ட் என்னைபொறுத்தவரை மன்னியை தவிர ரெண்டு பேர்.
பேரு சொல்லமாட்டேன். எனென்றால் வம்பில் மாட்டிகொண்டு அடிவாங்க
எனக்கு இஷ்டமில்லை.

பின் குறிப்பு :
நான் எழுதின ரசத்து வண்டல் விஷயம் தெளிவாக இல்லையென்றால்
அதற்கு காரணம் எனக்கு தெளிவு ரசம் தான் பிடிக்கும்.

,

,

,
,

,

.

.

.

. .

Posted ஜூன் 1, 2014 by vimalam in Uncategorized

மனசாட்சி…..   Leave a comment

@saattooran:
விருப்பம் போல் தன்னிச்சையாக நடந்து கொள்கிறாயே!
கொஞ்சம் அமர்ந்து உன் நடவடிக்கைகளை
நீயே யோசித்து பார் என்றது மனசாட்சி.
தைரியமில்லையே எனக்கு !

Tweet dated 01/06/2014

20140601-075522-28522685.jpg

Posted ஜூன் 1, 2014 by vimalam in Uncategorized

முதுமை..   Leave a comment

@saattooran:
மண்ணில் பிறந்து
மண்ணின் மைந்தனாக
மண்ணில் உழைத்து
மண்ணின் பயனாய்
மானத்துடன் வாழ்ந்து
முதுமையில் மண்ணோடு
மண்ணாக ஆசையாய்

Tweet on 31/05/2014

@saattooran: உழைப்பின் களைப்பில்லா உறுதி
உடம்பில் திடமாக ஒளிர்கிறது
ஓய்ந்து விடமாட்டேன்
ஓய்வுக்காக சாய்ந்துகொள்வேன் என்பது போல

இது FB ல் என் தங்கை விஜி எழுதிய பதில் மொழி.
01/06/2014

20140531-215251-78771583.jpg

Posted மே 31, 2014 by vimalam in Uncategorized

கவிதை …ரசனை   Leave a comment

@saattooran:
பழைய,புதிய திரைப்பட பாடல்கள்
பல நல்ல கருத்துக்களை
கொண்டுள்ளன .
ஆனால் இசையை மட்டும் ரசித்து
பாடலின் கருத்தை அசை போடாதோர் பலர்.

@saattooran:
கவிதைகளை ரசிக்க கற்றுக்கொள்ளுங்கள்.
வாழ்க்கையை ரசிக்க முடியும்.

Posted மே 29, 2014 by vimalam in Uncategorized

Follow

Get every new post delivered to your Inbox.

Join 94,727 other followers