என்னுடைய அம்மாவின் சமூக பணி .   Leave a comment

அவளுக்கு இப்பொழுது 85 வயது.
எந்த வயதிலும் பிறருக்கு உதவி செய்யும்
எண்ணத்தோடு வளர்ந்தவள் .
பேரன் பேத்திகள் வளர்ந்து
பெரியவர்களானதும்
நிறைய பணம் பாட்டிக்கு கொடுக்க
ஆரம்பித்தார்கள் .
அந்த அம்மாவின் கருத்து,
இந்த வயதிலே எனக்கு
எதுக்கு இவ்வளவு பணம் என்று
.யோசனை செய்து
ஒரு முடிவு எடுத்தார்கள் .
தன்னை சுற்றி உள்ள ஏழை களின்
குழந்தைகளை சாதி மத வித்தியாசம்
பாராமல் படிக்கவைப்பது .
வீட்டில் வேலை செய்பவர்களின்
குழந்தைகளை படிக்க வைக்க
ஆரம்பித்தார் .அவர்கள்
பள்ளிகூட கட்டணம் ,சீருடை
,பேனா பென்சில்
போன்ற உபகரணங்கள் ,
அவர்கள் வீட்டில் அணிந்துகொள்ள
துணிமணிகள்
என்று உதவ ஆரம்பித்தார்.
அந்த குழந்தைகள் பள்ளியில்
எப்படி படிக்கிறார்கள்
என்று கேட்டு அறிந்து கொள்வார்
. இப்போது அந்த குழந்தையில் ஒருவன்
பெரியவனாகி பிளஸ் டூ
முடித்து கம்ப்யூட்டர் கோர்ஸ் சில முடித்து
(எல்லாம் அம்மாவின் நிதி உதவி மற்றும்
நேரடி ஆலோசனையில் )இப்போது மாதம்
20,000/= சம்பளத்தில் வேலை
பார்த்து கொண்டு இருக்கிறான் .
ஒரு பெண் B E படித்து கொண்டு இருக்கிறாள் .
இன்னும் பலர் உயர் நிலை பள்ளிகளில் .இதில்
ஊனமுற்ற ஒரு பையனும் உண்டு .
அம்மாவை இழந்த சிறுவர்கள் உண்டு .
குடிகார கணவர்களால் நிர்கதியான
குடும்பங்கள் உண்டு.இது தவிர
வசதி குறைவானவர்கள் அறுவை சிகிச்சைக்கும்
உதவிகள் செய்வது உண்டு.

அம்மா (அவளே அறியாமல் )
பின்பற்றும் சில நடவடிக்கைகள் .

1.பணம் சேரும் அளவை கொண்டு திட்டமிடல் .
2.பணம் முறையாக செலவு செய்ய படுகிறதா என்று கண்காணித்தல் .
3.குழந்தைகளை அவ்வப்போது சந்தித்து உரையாடல் .
4.பெற்றோர்களை சந்தித்து அவர்களுக்கு ஆலோசனை கூறுதல் .
5.குழந்தைகளுக்கு கல்வி தவிர்த்து அன்றாட வாழ்க்கைக்கு வேண்டிய
அத்தியாவசியங்களை கவனித்து வழங்குதல் .
6.பணம் கொடுத்து உதவுபவர்களுக்கு , அவர்கள் நம்மிடம்
எதிர்பார்காவிட்டாலும் , நாம் என்ன செய்து கொண்டு இருக்கிறோம்
என்று அவர்களுக்கு அறிவித்தல் .

இன்று அம்மாவின் இந்த நல்ல பணியின்
ஆண்டு செலவு தொகை ஒரு லட்சம்
தாண்டி விட்டது .
இந்த நல்ல காரியத்திற்கு மனமுவந்து
மகிழ்ச்சியுடன் உதவும் அனைத்து பேரன்
பேத்திகளுக்கும் ,உற்றார் உறவினர்களுக்கும்
அம்மாவின் சார்பில் இந்த பொங்கல் நாளில்
நன்றியை தெரிவித்து கொள்ளுகிறேன் .

அந்த அம்மா நம் விமலா பாட்டியை தவிர வேறு யாராக இருக்க முடியும் .

20130707-094004.jpg

Advertisements

Posted ஜூலை 7, 2013 by vimalam in Uncategorized

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

%d bloggers like this: